குழந்தைகளின் உலகம் – சில பயிற்றுவிப்புக் குறிப்புகள்
“பிள்ளைகளிடம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியைக் காண பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு விடயத்தையும் அதற்குரிய நேரம் வரம் வரை விட்டு விடுவதே அறிவுடமை ஆகும்.
குழந்தைகளது இளமைப் பருவ ஆசைகள் அப்பருவத்திலேயே நிறைவேறாமல் போனால் அவர்கள் தம் வாழ்கையில் எஞ்சியிருக்கும் காலமெல்லாம் அது பற்றி எண்ணிக் கொண்டே இருப்பார்கள். முதிர்ச்சிக் கட்டத்தை அடையும் போது அந்த ஆசைகளின் விளைவாக நகைப்புக்குரிய விடயங்களைக் கூட அவர்கள் செய்ய முற்படலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.”
“குழந்தைகளில் உலகம்” சில பயிற்றுவிப்புக் குறிப்புகள் எனும் நூல் “110 நஸாஇஹ் லி தர்பியதி திப்லின் ஸாலிஹ்” எனும் பெயரில் அரபு மொழியில் அமைந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
குழந்தைகளை செவ்வனே வழிப்படுத்தும் பயிற்றுவிப்புக்கான குறிப்புகளே இவை.
சமகால நவீன பிள்ளை வளர்ப்பு கோட்பாடுகளுக்கு இசைவான முறையில் இந்நூல் 110 உபதேசங்களை ஆன்மிகம், அறிவியல், உளவியல் கலந்து காலத்தின் போக்குடன் உடன்பட்டு செல்லும் வகையில் முன்வைப்பது நூலின் சிறப்பம்சம் எனலாம்.
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்துக்கு முன்னரான வாசிப்புக்கு கட்டாயம் பரிந்துரை செய்ய முடியுமான இன்றியமையாத நூல் எனலாம்.
பிள்ளைகளைக் கையாள்வதில் சவால்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் பெற்றோர் இந் நூலை நிதானமாக வாசித்தால் தமது பிள்ளைகளை வளர்த்து வடிவமைப்பதில் எந்த இடத்தில் சறுக்கலும் பிழையும் நிகழ்ந்துள்ளன என்பதை உடனடியாக ஊகித்து உணரலாம். அங்கிருந்து தம்மையும் சுதாகரித்து நிலைமையை சீராக்கலாம். அந்தளவு கனதியான உள்ளடக்கத்தை சுருக்கமாகவும் உருக்கமாகவும் உண்மையாகவும் உயிரோட்டமாகவும் நூல் தருகிறது.
ஒவ்வொரு பக்கத்தில் ஒவ்வொரு ஆலோசனைகளாக தரப்பட்டுள்ளதால் வாசிக்கவும் விளங்கவும் கிரகிக்கவும் சுலபமாக உள்ளது. தமிழ் மொழி நடையும் அதற்கு பிரதான காரணம்.
அதுபோலவே ஒவ்வொரு பெற்றோரையும் நோக்கி உள்ளத்தின் கதவுகளையும் சிந்தனையையும் அழுத்தமாகவும் அன்பாகவும் தட்டி உசுப்பி உணர்த்திவிடும் ஆற்றல் கொண்டவையாக இந்த ஆலோசனைகள் அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது.











Reviews
There are no reviews yet.