Kulanthai Nadathai Kolangalum Valiyolungukalum – குழந்தை நடத்தை கோலங்களும் வழியொழுங்குகளும்
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எதிர் நோக்கும் மிக முக்கியமான சவால்களை மையப்படுத்தி அவற்றை எவ்வாறு சீர்படுத்திக் கொள்வது அல்லது எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பெற்றோர்களை வழிகாட்டுகின்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. குழந்தை உலகில் குழந்தைகள் வெளிக்காட்டுகின்ற உள வெளிப்பாடுகளான,
- அச்சம் / பயம்
- இழிவாய்ப் பெயர்ச்சொல்லி அழைத்தல்
- உடன்பிறப்புகளுடன் போட்டி சண்டை
- உண்பதில் பிரச்சினை
- கையில் கிடைப்பதை உடைத்தல்
- வீட்டை பாடசாலையை விட்டு ஓடும் மனநிலை
- ஒதுங்குதல்
- கவனம் ஈர்க்கும் செயல்கள்
- கழிவறைச் சிக்கல்கள்
- குளியல் பிரச்சினைகள்
- குறுக்கிடுதல்
- கோபத்துடனான அழுகை
- சிணுங்குதல்
- சீர்குலைத்தல்
- தன்னுடையதெனல்
- தாக்கும் குணம்
- அதிக துறுதுறுப்பு
- திக்குதல்
- திருடுதல்
- தூக்கப் பிரச்சினைகள்
- நகம் கடித்தல்
- படுக்கை நனைத்தல்
- பொய் சொல்லுதல்
- முரண்டு பிடித்தல்
- குழந்தைகளும் கை தொலைபேசியும்
ஆகிய 25 உள வெளிப்பாடுகளை தலைப்பாக இட்டு அவை தொடர்பான சிறு அறிமுகத்தோடு அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் மிக அழகிய முறையில் ஆசிரியர் பெற்றோர்களுக்கு வழிகாட்டப்படுகின்றது.
இந்நூல் குழந்தைகளை கையாள்வதற்காக அடையாளப்படுத்திக் காட்டுகின்ற வழிமுறைகள் மிகவும் இலகுவானதாகவும் அனைவராலும் செயற்படுத்த முடியுமான அணுகுமுறையாகவும் காணப்படுகின்றது.
அந்த வகையில் தங்களது குழந்தைகளை எதிர்காலத்தில் சிறந்த குழந்தைகளாக வளர்த்தெடுக்க வேண்டும், சமூகத்தில் நல்ல பிள்ளைகளாக அவர்கள் மிளிர வேண்டும் என்று கனவு காணுகின்ற ஒவ்வொரு பெற்றோரும் வாசித்து பயன்பெற வேண்டிய உன்னத நூலாக இந்நூல் காணப்படுகின்றது.
60 பக்கங்களுக்குள்ளால் அமையப்பெற்றுள்ள இந்நூல் இலகுவான மொழிநடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வசன ஒழுங்குகளை கையாண்டு ஆசிரியர் வடிவமைத்துள்ளார்.
Fathima Irfana (verified owner) –
This book is very useful.
All are buy and read this book in future