கிறுக்கி | Kirukki (Short Novel): புறக்கணிப்பின் நிழல் விழுந்த மனிதர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களை சமூகத்தினராக யாரும் கொண்டாடுவதில்லை. எமது விழாக்களுக்கு அழைப்பதில்லை, வீடுகளுக்குள் அனுமதிப்பதில்லை. கேளிகளும் நகைச்சுவைகளுக்குமே அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அத்தகைய மனிதர்களின் மனநிலையை, உணர்வுகளை, வாழ்க்கையின் புரியாத பக்கங்களை இரண்டு தேவதைகளின் வழியே தேடிப் பயணிக்கிறது இந்நாவல்.
மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் பாதிக்கப்படாத ஒருவருக்கும் இடையே உள்ள வாழ்க்கையின் சுதந்திரம், தனிமை, வறுமை, மகிழ்ச்சி என்பவற்றை அவர்களின் கதைகள் எமக்கு வழமையை விட சற்றே அருகாமையில் இருந்து புரிய வைக்கிறது.
ஒரு கிறுக்கியின் கதையாக மட்டுமில்லாது, கிராமத்து வாழ்க்கையின் நறுமணத்தை, மனிதர்களின் வெள்ளந்தி மனங்களை, சமூகத்தின் வாழ்வியலை, பால்யத்தின் ஏரம் நிறைந்த நினைவுகளையும் இந்த நாவல் சுமந்திருக்கிறது.
ஒரு கிறுக்கியின், கிறுக்கனின் சுதந்திரம் நெருக்கடி நிறைந்த நவீன வாழ்க்கையில் யாருக்குக் குத்தான் கிடைக்கும் என்ற கேள்வியையே இந்த நாவல் கிறுக்கி | Kirukki (Short Novel) இன்றைய மனிதர்களிடம் கேட்கிறது.
இன்ஸாப் ஸலாஹுத்தீன்





Reviews
There are no reviews yet.