Need help? Call us:

074 117 4525

-20%

எல்லா வாயிலையும் மூடாதீர்கள்

Brand:

Original price was: 750.00LKR.Current price is: 600.00LKR.

or up to 4 X LKR150.00 with Payzy Payzy

30 people are viewing this product right now

Translated & compiled by : Ash Sheikh.A.W.M.Basir (Naleemi)

Language: Tamil
First Edition: August 2026
Pages: 84
ISBN: 978-624-94173-0-4

In stock

or
Estimated delivery:5 days
SKU: 000423581 Categories:

Join our WhatsApp Channel for insider info & offers

Get in touch

எல்லா வாயிலையும் மூடாதீர்கள் என்பது இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் அழைப்பியல் கருத்துகளை உள்ளடக்கிய தமிழ் நூலாகும். இந்நூல் பல்வேறு தலைப்புகளின் ஊடாக ஆன்மிக வாழ்க்கை, தஃவா பணி, மனிதப் பண்புகள், இறையச்சம், தவ்பா, மறுமை சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற முக்கியமான விடயங்களை எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.

இதில், ஒருவர் தவறு செய்திருந்தாலும் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான அனைத்து வாயில்களையும் மூடிவிடக் கூடாது என்ற ஆழமான கருத்து எடுத்துக்காட்டுகளுடன் முன்வைக்கப்படுகிறது. ஒரு வாயில் திறக்கப்படும்போது பல வாயில்கள் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையையும் இந்தப் பகுதி வலியுறுத்துகிறது.

இந்த நூலில் குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தல், இபாதத்களின் யதார்த்த நிலை, தக்வா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், தவ்பா, அல்ஹம்துலில்லாஹ்வின் அருள்கள், உலகமும் மறுமையும், மரணம் தொடர்பான சிந்தனைகள், அழைப்பியல் சிந்தனைகள் மற்றும் மனிதனை கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

சாதாரண வாசகர்களும் இஸ்லாமிய சிந்தனைகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில்  நூல் அமைக்கப்பட்டுள்ளது. தஃவா மற்றும் சமூகச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும்  இந்நூல் வழங்குகிறது.

இஸ்லாமிய சிந்தனை, ஆன்மிக வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல்களைத் தேடும் வாசகர்களுக்கு எல்லா வாயிலையும் மூடாதீர்கள் இந்நூல் பயனுள்ள வாசிப்பாக அமையும்.

மிகக் கவனமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அலுப்பின்றி தொடர்ந்து வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆரம்பத்திலிருந்துதான் இந்நூலை வாசிக்க வேண்டும் என்றில்லை. விரும்பிய கட்டுரையை முதலில் வாசிக்கும் வகையில் ஆக்கங்கள் அமைந்துள்ளன. வாசிப்பு பழக்கம் அருகிவிட்ட இக்காலப்பகுதியில் இவ்வமைப்பில் ஒரு நூல் அமைந்திருப்பது பலரையும் வாசிக்கத் தூண்டும் சிறந்த உத்தியாகும்.

சாதாரண மக்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் சிந்தனைகளை கொண்டு செல்வது எவ்வாறு? ஆன்மீக வாழ்வு குறித்து கவனத்தைச் செலுத்துமாறு வேண்டுவது எவ்வாறு? இக்கேள்விகளுக்கு இந்நூல் பதில் தருகிறது.

இஸ்லாத்தின் சிந்தனைகளை சாதாரண மக்களும் விளங்கும் பாஷையில் எளிமையாக முன்வைக்கவும் ஆன்மீக ரீதியாக அவர்களை வழிநடாத்தவும் சமூகத்தின் சிக்கல்களை சரளமாக முன்வைக்கவும் சீர்திருத்தம், பிரச்சார வழிமுறையை உதாரணங்களுடன் அழகாக விளக்கவும்வ்வாறான புத்தகங்கள் நிறையவே தேவையாகும்.

ஷெய்க் பாஸிர் மேலும் பல அழகான நூல்களை ஆக்கி, சமூகத்திற்கு வழிகாட்டுவதில் பங்களிப்பு செய்ய வேண்டும் என மிகவும் எதிர்பார்க்கிறோம்.

– உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “எல்லா வாயிலையும் மூடாதீர்கள்”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

You may add any content here from XStore Control Panel->Sales booster->Request a quote->Ask a question notification

At sem a enim eu vulputate nullam convallis Iaculis vitae odio faucibus adipiscing urna.

Ask an expert