தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல் – ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண்டும் உங்கள் கரங்களில்…
தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல் (மதீனதுன் நுஹாஸ்)
தமிழ் பேசும் உலகின் ஆரம்பகால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் தாமிரப்பட்டணம் (மதீனதுன் நுஹாஸ்), இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் கி.பி. 1858ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரதாப முதலியார் சரிதம் (1879) வெளிவருவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்னரும், அசன்பே சரிதம் (1885) வெளிவருவதற்கு 27 ஆண்டுகளுக்கு முன்னருமே இந்நாவல் எழுதப்பட்டது.
நாவலின் கதை, உமைய ஆட்சியாளர் கலீபா அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களை மையமாகக் கொண்டது. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தண்டனை பெற்ற ஜின்களைப் பற்றிய உண்மையை அறிய விரும்பும் கலீபா, தனது அமைச்சர்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த முயல்கிறார். இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, திகிலும் சுவாரஸ்யமும் நிறைந்த கதையாக தாமிரப்பட்டணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் இந்நாவலை நவீன வடிவில் வாசகர்களிடம் கொண்டு வந்திருப்பது சீர்மை பதிப்பகம். தமிழ் மற்றும் மலையாள சூபி மகான்களின் முக்கியமான படைப்புகளை நவீன பதிப்புகளாக வெளியிட்டு வரும் பதிப்பகத்தின் பணியில் இந்நூலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது.





Reviews
There are no reviews yet.