சமநீதி | Samaneedhi | සමනීදි “இந்த AI காலத்தில் அச்சு ஊடகம் (Print Media) தேவையா?” என்ற கேள்வி எழலாம். தேவையில்லை என்பதற்கு பலரிடம் பல காரணங்களும் இருக்கலாம்.ஆனால், அது தேவைதான் என்ற நியாயங்களோடு, ‘சமநீதி’ (Equity) என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகையொன்று (Monthly Magazine) இம்மாதம் முதல் வெளிவருகிறது.
“பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பொதுவான சஞ்சிகையே இது.”
எவ்வளவுதான் டிஜிற்றல் உலகம் என்று பேசினாலும், அச்சிதழ் ஒன்றுக்கான தேவை இல்லாமல் போவதில்லை. அச்சிதழ் அதற்கே உரித்தான சிறப்பியல்போடும் தனித்தன்மையோடும் இருக்கும்.
குறைந்தபட்சம் சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள மேம்போக்காக வாசித்துக் கடந்து செல்லும் போக்கிலேனும் ஒரு மாற்றம் தேவை.
விடயங்களை ஆழமாகப் பேசவும் உரையாடவும் ஒரு களம் தேவை.
கொள்கை வகுப்பாளர்கள், கருத்துருவாக்கத் தலைவர்கள் (Opinion Leaders), விடயங்களை ஆழமாக நோக்குவோர், சமூகத்திலுள்ள சிந்திக்கும் தரப்பினர், கூர்மையான வாசகர்கள் என்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது.
அத்தோடு தரமான, நல்ல வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.இத்தகைய பின்புலத்திலேயே ‘சமநீதி’ வெளிவருகிறது.
உள்ளே…
- உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் (PSTA) சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் கருத்து.
- சுஹைல் கைது – சுஹைல் விடுதலை – 2 மில்லியன் நஷ்டஈடு கற்றுத் தரும் 5 பாடங்கள்.
- தேர்தல் வாக்குறுதிகளை மீறும் அரசியல்வாதிகளின் எதிர்காலம்.
- அனுர – மீட்டர் ஜனாதிபதியின் 30 வாக்குறுதிகளின் நிலை.
- உறுதியான நிலைப்பாடுகளின் மூலம் ஒற்றுமையைப் பேணுதல் : இலங்கையில் பிறை பார்த்தல் குறித்த மீள்வாசிப்பு.
- இலங்கையின் தேசிய கல்வித் தகைமைக்குள் உள்வாங்கப்படும் மத்ரஸா பாடத்திட்டம்.
- பொல்லைக் கொடுத்து வாங்கிக் கட்டும் மத்திய கிழக்கு அரசுகள்.
- இஸ்ரேல் அரபு நிலங்களை விழுங்குவதைத் தடுக்க முடியுமான ஒரே நாடு ஈரான் மட்டுமே.
- போரின் முடிவும் உலக ஒழுங்கின் எதிர்காலமும்!
- ஈரான் – அமெரிக்க யுத்தம் இலங்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள்.
- ஜனாஸா எரிப்புக்கு 6ஆண்டுகள் நீதி கோரி 20 முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதிக்கு மகஜர்.


Reviews
There are no reviews yet.