சமநீதி | Samaneedhi | සමනීදි “இந்த AI காலத்தில் அச்சு ஊடகம் (Print Media) தேவையா?” என்ற கேள்வி எழலாம். தேவையில்லை என்பதற்கு பலரிடம் பல காரணங்களும் இருக்கலாம்.ஆனால், அது தேவைதான் என்ற நியாயங்களோடு, ‘சமநீதி’ (Equity) என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகையொன்று (Monthly Magazine) இம்மாதம் முதல் வெளிவருகிறது.
“பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பொதுவான சஞ்சிகையே இது.”
எவ்வளவுதான் டிஜிற்றல் உலகம் என்று பேசினாலும், அச்சிதழ் ஒன்றுக்கான தேவை இல்லாமல் போவதில்லை. அச்சிதழ் அதற்கே உரித்தான சிறப்பியல்போடும் தனித்தன்மையோடும் இருக்கும்.
குறைந்தபட்சம் சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள மேம்போக்காக வாசித்துக் கடந்து செல்லும் போக்கிலேனும் ஒரு மாற்றம் தேவை.
விடயங்களை ஆழமாகப் பேசவும் உரையாடவும் ஒரு களம் தேவை.
கொள்கை வகுப்பாளர்கள், கருத்துருவாக்கத் தலைவர்கள் (Opinion Leaders), விடயங்களை ஆழமாக நோக்குவோர், சமூகத்திலுள்ள சிந்திக்கும் தரப்பினர், கூர்மையான வாசகர்கள் என்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது.
அத்தோடு தரமான, நல்ல வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.இத்தகைய பின்புலத்திலேயே ‘சமநீதி’ வெளிவருகிறது.
உள்ளே…
- முற்றுகையிடப்பட்ட சமூகமா, சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகமா?
- இலங்கையில் தொல்லியல் : நல்லதும் கெட்டதும்
- புதிய மத்திய கிழக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் (New Middle East)
- இணைய உளவியல் : சில முன்னோடிக் குறிப்புகள்
- புதிய பெயரில் பயங்கரவாத தடுப்புச் சட்டம்
- டித்வா அனர்த்தத்துக்குப் பின், அடுத்த அனர்த்தத்துக்கு முன்
- இலங்கையில் தித்வா சூறாவளியும் பாதிப்பும் : தாக்கங்கள், மீட்பு, மீண்டெழுவதில் தாக்குப்பிடிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குதல்
- தித்வா எதிரொலி: மலைநாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதுதான் பாதுகாப்பானது
- தித்வா பேரழிவும் வருமான வரிக் கொள்கையும்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – நன்கொடையாளர்களுக்கு சலுகை
- அனர்த்தங்களின் அடுத்த பக்கம்: நிவாரணங்களால் நிரப்ப முடியாத மன அழுத்தத்துக்கு முகம் கொடுத்தல்
- இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா?


Reviews
There are no reviews yet.