Nabihal Sollum Seythikal | நபிகள் சொல்லும் செய்திகள்
நபிகளாரின் ஸீறாவைப் பலரும் பல கண்ணோட்டங்களில் அணுகி. ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளனர். அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் எழுதப்பட்ட நூல்களும் பல உள்ளன. இந்த வகையில் ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி. ஷெய்க் ஸஈத் றமழான் அல்-பூத்தி. மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி ஆகியோரின் ஸீறா நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஆயினும். இந்நூல் நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்ககூடிய. கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான விஷயங்களை மட்டும் ஸீறாவெனும் சமுத்திரத்தில் முத்துக் குளித்து முத்துக்களைப் பொறுக்கியெடுத்து நமக்குத் தந்துள்ளது.
உஸ்தாத் ஏ.சீ.அகார் முஹம்மத்
மூல மொழியின் சுவை சற்றும் குறையாமல் வாசகர்களை அலுக்க வைக்காத முறையில் அருட்டலுணர்வின்றி அருமையான தமிழுக்கு கொண்டு வந்து வாசகர்களுக்கு நபிகளாரை நடைமுறை வாழ்வியலுக்கு நெருக்கமான முன்மாதிரியாக காண்பிக்கின்றார். இது அவரது தனித்திறன். தனித்துவமான மொழித் திறன் எனலாம்.
உண்மையிலேயே நபிகளாரின் வாழ்வை இன்னும் ஆழமாக கற்றுக் கொள்வதற்கும் அவர் மீது பற்றுக் கொள்வதற்கும் இந்நூல் வழியமைக்கின்றது
அரபு மொழி தெரியாதவர்களுக்கும் கூட நபிகளாரை வாசிப்பதற்கான உத்வேகத்தை நிச்சயம் இந்நூல் தருவதோடு நபிகளாரை தத்தமது ஒட்டுமொத்த வாழ்விலும் பிரதிபலிக்கச் செய்யவும் இந்நூல் வழிகாட்டுகிறது என துணிந்து கூறலாம்.
நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் அங்க அவயவங்கள் குறித்தான அழகு வர்ணனை விபரிப்புகள் போன்றனவே ஹதீஸ் என பொதுவாக அழைக்கப்படும். நபிகளாரை நடமாடும் முன்மாதிரி மனிதராக எம் முன்னே கொண்டு வந்து விடுகிறது நூல்.
ALA.RAHEES (verified owner) –
Great work
Fast delivery
M.R.Mohammed Riskhan (verified owner) –
This is very useful. It is written in small paragraphs. It is very easy to read.