இலட்சியவாதியிடம் இருக்க வேண்டிய ஈமானியப் பண்புகள்
“ஒரு இலட்சியவாதியிடம் இருக்க வேண்டிய ஈமானியப் பண்புகள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் ஆன்மீக வறுமைக்கான ஒரு ஆக்கபூர்வமான தீர்வாகத் திகழ்கிறது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மனிதத் திறன்களை முந்திச் செல்லும் இக்காலத்தில், மனிதனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது வெறும் அறிவு வளர்ச்சியால் மட்டுமல்ல, ஈமானியப் பண்புகளால் என்பது மிகவும் வலிமையாக இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.
எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி , மதனி) M.A. அவர்கள் எழுதிய இந்நூல், அல்லாஹ் வழங்கிய வாழ்க்கைப் பயணத்தை ஈமானால் ஒழுங்குபடுத்தி, இலட்சியத்தால் உயர்த்திச் செல்லும் ஒரு முஃமினின் கையேடாக அமைகிறது. தெளிவான தலைப்புகள், சீரிய அமைப்பு, வாசகனை ஈர்க்கும் மொழிநடை, முக்கியமான கருத்துக்களின் தொகுப்பு என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு வாசகர்களின் உள்ளத்தைத் தொட்டடையக்கூடியதாக உள்ளது.
அல்லாஹுதாலா நூலாசிரியரின் இந்த முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கி, இந்நூலினால் நம் அனைவருக்கும் நன்மை அருள்வானாக.
ஆமீன் யா றப்பல் ஆலமீன்.
அஷ்ஷெய்க் எஸ். அலாவுதீன் (ஸலபி)
BA (cey), PGDE, M.Edu



Reviews
There are no reviews yet.