இஸ்லாமிய சட்டங்கள்: சுத்தம் – மத்தஹபுகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு
என்ற இந்நூல், இஸ்லாமிய சட்டத் தொடர் நூல் வரிசையின் முதல் பாகமாக வெளிவருகிறது. இஸ்லாமிய சட்டத்தின் அனைத்துப் பாடப் பரப்புகளையும்அவற்றின் ஆதாரங்கள், கருத்து முரண்பாடுகள், அவற்றுக்கான காரணங்கள் என்பவற்றை ஓரளவு விரிவாக ஆராய்ந்து, நவீன காலத்துக்கேற்ற வகையில் இஸ்லாமிய சட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ஸஹாபாக்கள் காலம் தொட்டு நவீன காலம் வரை, இஸ்லாமிய சட்டம் பல வித்தியாசமான கால சூழ்நிலைகளுக்கும் நெகிழ்ந்து கொடுத்து, வளர்ந்து வந்திருக்கின்றது.
நவீன காலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறைகளில் புரட்சிகரமான பல மாற்றங்களைக் கண்டமை புதிய சூழ்நிலைகளையும், பிரச்சினைகளையும், சட்ட விவகாரங்களையும் தோற்றுவித்தது. இஸ்லாமிய சட்டத்தின் நவீன கால வளர்ச்சிக் கட்டத்தின் ஒரு அம்சம், அதனைஅடிப்படையான இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களினடிப்படையில் அணுகி, பல மத்ஹபுகளினதும் சட்ட அறிஞர்களினதும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து,
இக்காலத்துக்கு பொருத்தமான சட்டங்களை முன்வைப்பதாகும். இதுவே இந்நூலின் போக்காகவும் அமைந்துள்ளது.


Reviews
There are no reviews yet.