Dr. Mahathir – Kadaram Muthal Kolampur Varai
டாக்டர் மஹாதீர் கடாரம் முதல் கோலாலம்பூர் வரை
மலேசியாவின் நான்காவது பிரதமராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் டாக்டர் மஹாதீர். அது முழு உலகுக்கும் நிலைமாற்ற காலம். அவரது காலத்தில் மலேசியா உலக அரங்கில் மகத்தான பாய்ச்சலொன்றை நிகழ்த்தியது. பொருளாதாரத்தில் முக்கியமான, அதேவேளை உறுதியான இடத்துக்கு வந்தது.
அவரது அதிகார தவணைகள் உலகை தலைகீழாக புரட்டிய இரு நூற்றாண்டுகளின் பிரிகோட்டில் பயணித்தது. சோவியத் – அமெரிக்க பனிப்போர் உலக புவியரசியலின் வலுச் சமனிலையை தீர்மானித்தது. அதன் காய் நகர்த்தல்கள் தென் கிழக்காசிய நாடுகளை விட்டு வைக்கவில்லை. பிராந்தியத்தில் சீனா ஒரு பொருளாதார டிராகனாக உருமாற்றிக் கொண்டிருந்தது.
வல்லரசுகளின் அதிகார ஆட்டங்களை கையாளும் இராஜ தந்திர ஆற்றல் டாக்டர் மஹாதீர் முஹம்மதிடம் இருந்தது. அவர் தூர தரிசனமும் தீட்சண்ய பார்வையும் மிக்கவர். அரசியல் காணக்கியமும் அரசியல் தந்திரமும் நன்கறிந்தவர். ஆசியாவில் அவரது சம காலத்தில் நிறைய தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களில் எவரும் சாதிக்காததை அவர் சாதித்தார். அதனால்தான் அவர் ஆசியா முழுமைக்குமான தலைவராகக் கொண்டாடப்படுகிறார்.







Reviews
There are no reviews yet.