அல்குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைத்தூதர் صلى الله عليه وسلم
Alquraniya Vaazhvai Sumantha Iraitthoothar
ஸீரா பற்றிய சமகால ஆய்வுகளில் அதன் உள்ளடக்கத்தை மையப்படுத்திய தேடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பிரத்தியேகமாக ஆராய்ந்து, வெறும் தரவுகளை மாத்திரம் பதிவு செய்யாது திறனாய்வு அடிப்படையில் ஸீராவை அணுகும் கலை ‘விடயதான ரீதியான ஸீரா’ என வழங்கப்படுகிறது. இத்தகைய அணுகுமுறையே இந்நூலில் கையாளப்படுகின்றது.
அல்குர்ஆனின் ஒளியில் இறைத்தூதர் ( அவர்களைப் புரிந்து கொள்ளல், நபி ( صلى الله عليه وسلم ) அவர்களின் வாழ்வில் ஒரு நாள், நபிகளாரின் ஒழுக்கநெறி, இன்ப-துன்ப நிகழ்வுகளை நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கையாண்ட விதம் ஆகிய தலைப்புகளை இந்நூல் ஆராய்கிறது. அல்குர்ஆன், ஹதீஸ், ஸீரா நூல்கள், ஸஹாபாக்களது பதிவுகள் போன்ற மூலாதாரங்களையும் ஸீரா தொடர்பான சமகால ஆய்வுகளை பின்வரும் அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01.அல்குர்ஆனின் ஒளியில் இறைத்தூதர் (ஸல்).
02. இறைத்தூதரின் வாழ்வில் ஒரு நாள்.
03. இறைத்தூதர் காட்டிய ஒழுக்கநெறி.
04. இன்பத்திலும் துன்பத்திலும் இறைத்தூதர்.



Reviews
There are no reviews yet.