ஆன்மாவின் படித்தரங்கள் – ஸூஃபி ஆன்மிக உளவியல் நூல்
அனைத்து நன்மைகளும் அகத்தூய்மையில்தான் அமைந்திருக்கின்றன. எனவே, மனத்தைத் தூய்மை செய்யும் வழிமுறைகளை ஒருவர் அறிய வேண்டியது அவசியமாகிறது. ஸூஃபித்துவம் அதனைச் சொல்லிலும் செயலிலும் கற்பிக்கிறது.
அந்த அகக் கல்விக்காக திருமறையின் வழிகாட்டுதல்படி மனிதனின் மனநிலைகளை ஆழ்ந்து கண்டு, அதன் வகைப்பாடுகளுக்குரிய தன்மைகளையும் ஓதுமுறைகளையும் வகுத்து, முழுமையான ஒரு செயல்திட்டம் ஆக்கியுள்ளது.
அந்த வகையில், ஆன்மாவின் படித்தரங்கள் – ஸூஃபி ஆன்மிக உளவியல் நூல் ஸூஃபிப் பாதையில் மனித ஆன்மா அடையும் மாற்றங்களை விவரிப்பதன் வழியாக மனிதன் ஆன்மிகத்தில் அடைய வேண்டிய ஏற்றங்களை நமக்கு உணர்த்துகிறது. தன்னுடைய ஆன்மாவை, திருக்குர்ஆன் கூறும்படியான திருப்தியுற்ற, பூரண, செம்மையான ஆன்மாவாக மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவரும் பயிலவேண்டிய ஆன்மிகக் கையேடு இது.




Reviews
There are no reviews yet.