மக்கு என்ற அபி – இந்நூல், ஒரு நம்பிக்கை!
‘அபி’யைக் காணவில்லை!
அவன் சார்ந்தோரில் பலர், ‘அபியை அபியாகவும் காணவில்லை!
இப்பனுவல்-
- இரத்தமும் சதையுமான நெஞ்சு நெருடும் யதார்த்த அனுபவங்களின் திரட்டு.
- பிள்ளைகள் – வன்முறைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாது, அவர்களின் தன்மானங்களில் ஒரு சிறு கீறலும் விழாது- எங்ஙனம் கனிவான ஊக்குவிப்புடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற மாபெரும் கருப்பொருளின் சாரம்.
- சின்னஞ்சிறுசுகளைக் கையாளும் ஒவ்வொருவருக்குமான தனிரகக் கையேடு.
பொறுப்புக்கூற வேண்டிய நாம்,
சுவாசிக்கும் பொழுதெல்லாம்… குழந்தைகளை நேசிப்போம்!
நாளை-பள்ளிக்கூடங்கள் பசுமைச் சோலைகளாகும்!
வீடுதோறும் மேதைகள் பிறப்பு- சத்தியமாய்ச் சாத்தியமாகும்! சான்றாண்மையுள்ள ஓர் ஆதர்ச சமூகம் உருவாகும்!



M.U.Hasmath Farhana –
இந்த வலைத்தளத்தினூடாக இந்த புத்தகங்கள் மூன்றினை ஓர்டர் செய்திருந்தேன். ஓரிரு நாட்களுக்குள் அதாவது இன்று (09/01/2026) அந்த மூன்று புத்தகங்களும் என் கரங்களில் தவழ்கிறது..அழகிய முறையில் நேர்த்தியாக pack செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.மிக்க மகிழ்ச்சி.நம்பகமானதும் உணமையானதுமான இந்த வலைத்தளத்தினூடாக நீங்களும் இந்த புத்தகத்தை இலகுவில் ஓர்டர் செய்து விரைவாக பெற்றுக் கொள்ளுங்கள்.புத்தகத்தை வாசிக்க ஆவல் என்னை அழைக்கிறது..
நன்றிகள் கோடி..
Jezakallahu khair!