தொழுகையை மீளக் கண்டடைதல்
ஓர் இறைநம்பிக்கையாளரின் வாழ்வில் ஈமானுக்கு அடுத்து அதிமுக்கியமான ஒன்று என்றால் அது தொழுகைதான். இறைவனுடனான சந்திப்பு என்னும் பொருளில் நபிகளார் அதனை ‘ஆன்மிக மிஃறாஜ்’ என்றழைத்தார்கள்.
கவனச் சிதறல் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலருக்கும் தொழுகை பல சந்தர்ப்பங்களில் சம்பிரதாயமான, இயந்திர கதியிலான ஒன்றாக ஆகிவிடுகிறது. மீண்டும் அதனை உயிரோட்டமுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றிட விரும்புகிறீர்களா?
இந்நூல் அதற்கு மிகச் சிறந்த துணையாக அமையும்!
—
கைத்தொழில், வியாபார, விவசாய, குடியியல் துறைகள் சார்ந்த திட்டங்களை முறையாக நிர்வகிப்பதற்கும், வாழ்வுக்குப் பயன் தரக்கூடிய அம்சங்களை முதலீடு செய்வதற்குமான மிகச் சிறந்த வழிமுறைகள் எவை என ஆய்வு செய்கின்ற எத்தனையோ துறைகளும் பாடங்களும் இன்று நமது பொதுவாழ்விலும் பலகலைக்கழக வட்டங்களிலும் நிறைந்திருக்கின்றன.
ஆனால் இந்த அனைத்துத் திட்டங்களையும் விட சிறந்ததும், பயன்மிக்கதும், நீண்டு நிலைக்கக் கூடியதும், பெறுபேற்று உத்தரவாதம் கொண்டதும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையளிக்கக் கூடியதுமான ஒரு துறை உள்ளது. அதுதான் ‘வணக்க வழிபாடுகளை நிர்வகித்தல்’ என்ற துறை. பாடசாலைகளிலோ, கலாசாலைகளிலோ பலகலைக் கழகங்களிலோ இப்பகுதியை நிர்வகிப்பதற்கும் உரிய வகையில் முதலீடு செய்வதற்கும் என தனியான கலைத்திட்டமொன்றை அல்லது சிறப்புக் கற்கையொன்றை அல்லது பாடப் பரப்பொன்றை உருவாக்குதல் குறித்து நாம் சிந்தித்ததுண்டா?
அந்த வகையில் இந்நூல் பின்வரும் மையக் கருத்துகளில் சுழல்கிறது:
* பழக்கம், பரிச்சயம், இயந்திரத்தனமான இயக்கம் ஆகிய தூசுகளைத் தட்டி தொழுகையை மீண்டும் கண்டடைவது எப்படி?
* ‘கடமை’ என்ற நிலையிலிருந்து ‘உரிமை’ என்ற நிலைக்கும், ‘சுமை’ என்ற நிலையிலிருந்து ‘சுகம்’ என்ற நிலைக்கும் தொழுகை மாற்றமடைவது எப்படி?
* தினசரி வாழ்வு, காலவோட்டம், பரிச்சயம் முதலிய ‘வைரஸ்’கள் நமக்குள் பாழ்படுத்திய பாகங்களை தொழுகை எவ்வாறு மீள்நிரற்படுத்துகிறது?
* தொழுகை என்பது உலகம்-மறுமை ஆகிய இரண்டுக்குமான பாரிய முதலீட்டுத் திட்டமாகவும், இஸ்லாமிய நாகரிகத்தை மீள்நிலைப்படுத்துவதற்கான செயல்வரைவாகவும் அமைவது எங்கனம்?
Reviews
There are no reviews yet.