கடல் காற்று கங்குல்
Kadal Kaatru Kangul
கவிதை ஒரு ஜீவநதி், ஊறுவதையும் ஓடுவதையும் எங்கோ சென்று கலப்பதையும் பிரக்ஞையின்றியே நம் அகவெளியில் நிகழ்த்தி விடும் மாயநதி. வாழ்வென்னும் பெருவெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனித்தலையும் உண்மைகளை நுண்ணிய இழையினால் பிணைக்கும் அதிசயம் அது.
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.
நிலத்தில் கட்டங்கள் வரைந்து
புள்ளடியிட்டு சதுரங்கள் விளையாடிய
உறவுகள் பிறிதொரு நாளில்
பூமியைப் பிய்த்துக் கொள்ள வாதாடுகின்றன.
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன. ஆழ்கடலின் பேரமைதியில்… மெலிதான காற்றின் தாலாட்டில்… இருளில்… ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.
– பீ.எம்.எம். இர்ஃபான்





Reviews
There are no reviews yet.