குர்ஆனிய உலகக் கண்ணோட்டம் : மானுடச் சீர்திருத்தத்தின் தொடக்கப்புள்ளி
இஸ்லாமிய உலகக் கண்ணோட்டமே இஸ்லாத்தின் கோட்பாடுகளும், பெறுமானங்களும், எண்ணக்கருக்களும் கிளைபிரியும் வேராகும். அவற்றின் இயல்பை வரையறை செய்யக்கூடியதாகவும், அவற்றின் மூலாதாரத் தன்மையையும் முழுமொத்த இலக்குகளையும் பிரதிபலிக்கக்கூடியதாகவும் அக்கண்ணோட்டம் அமைந்துள்ளது. எப்போதும் இக்கண்ணோட்டம் தெளிவாகவும், மயக்கங்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும். இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், முரண்பாடுகளோ ஊகங்களோ அற்றதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தனிநபர்களையும் சமூகத்தையும் இயக்குகின்ற உந்துசக்தியாகவும், உள்ளார்ந்த நம்பிக்கை பலமாகவும் இருக்கும். எப்போது இக்கண்ணோட்டம் தெளிவற்றதாகவும், போலித்தன்மை நிரம்பியதாகவும் மாறுகிறதோ, அப்போது முஸ்லிம் சமூகத்தை இயக்குகின்ற அதன் கோட்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லாது போய்விடும். பின்வரும் தலைப்பில் ஆராய்கின்றது இந்நூல்.
- குர்ஆனிய உலக் கண்ணோட்டமே சீர்திருத்தத்திற்கான முதல் அடிப்படை.
- முழுமையான இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் உருக்குலைந்தது எவ்வாறு?
- அறிவும் வஹீயும் முரண்படுகின்றன என்பது ஊகமா? உண்மையா?
- நபித்தோழர்களுக்கு நாட்டுப்புற அறபியருக்கும் மத்தியில் இஸ்லாமிய கண்ணோட்டம்.
- குர்ஆனிய உலகக் கண்ணோட்டம் என்பது என்ன?
- குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்தில் “நாமும் பிறரும்”.
- குர்ஆனிய உலகக் கண்ணோட்டம் என்பது உலக சமாதானக் கண்ணோட்டம்.
- நிலையானதும் மாறக்கூடியதும் : காலம், இடம்.
- யதார்த்த இலட்சியவாதம்.
- குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்.
- குர்ஆனிய உலகக் கண்ணோட்டம் : சீர்திருத்தத்துக்கும் வளப்படுத்தலுக்குமான தூண்டுகோலும் தொடக்கப் புள்ளியும்.
- உலகக் கண்ணோட்டமும் பண்பாட்டு மானிடவியல் எண்ணக்கருக்களும்.
- பெரும் உழைப்புகள் வீணாவதைத் தவிர்க்க சற்று தொலைநோக்கு அவசியம்.
- இஸ்லாமியச் சமூகவியல் கலைகளைக் கட்டியெழுப்புவதும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தைச் செயற்படுத்துவதும் எவ்வாறு?
- இஸ்லாமியச் சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பங்களிப்புகள்.


Reviews
There are no reviews yet.