Samooga Oodagangalukkaana Fiqh – சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு
இன்றைய சமூக ஊடகக் காலத்தில் இஸ்லாத்தின் போதனைகளை நடைமுறைப்படுத்துவது எப்படி? இந்நூல் கவனம் செலுத்தும் விவகாரம் இதுதான்.
சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் நமது அன்றாட வாழ்விலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், ஆன்மீகத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இந்நூல் ஆழ்ந்து கவனிக்கிறது.
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை.
காலமாற்றங்களைக் கடந்துநிற்கும் இஸ்லாத்தின் போதனைகளை இக்காலப்பிரிவில் நடைமுறைப்படுத்துவது எப்படி? ‘சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு’ நூல் கவனம் செலுத்தும் விவகாரம் இதுதான்.
சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் நமது அன்றாட வாழ்விலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், ஆன்மிகத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இந்நூல் ஆழ்ந்து கவனிக்கிறது. இஸ்லாமியப் போதனைகளின் புள்ளிகளை இணைத்து, இத்தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நடைமுறை வழிகாட்டலை வழங்குகிறது.



Reviews
There are no reviews yet.