100 Life Lessons | 100 வாழ்க்கைப் பாடங்கள் – உங்களது கரங்களில் தவழும் இந்நூல் நமது ஆன்மீக வாழ்வையும், லௌகீக வாழ்வையும் போஷித்து, வளப்படுத்தி, வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டுகின்ற 100 வாழ்க்கைப் பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
அல்-குர்ஆன், ஸுன்னாவையும் ஆரம்ப கால அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டே பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.
அடையாள புருஷர்களாகக் கொள்ளத்தக்க, பிற்பட்ட காலத்திலும். சமகாலத்திலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் பற்றியும் சில பாடங்கள் பேசுகின்றன.
மனித வாழ்வின் யதார்த்தத்தையும் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள, கவலைகள் நீங்க, அச்சம், பயத்திலிருந்து விடுபட மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியையும் உள உறுதியையும் பெற, வாழ்க்கையில் நம்பிக்கைப் பிறக்க, ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெற, கெட்ட குணங்களைக் களைய, நற்குணங்களை வளர்த்துக் கொள்ள, அனைத்துக்கும் மேலாக இறைதிருப்தியைப் பெற்றுக் கொள்ளத் தேவையான வழிகாட்டல்களை தெரிந்துகொள்ள- இந்நூலில் பகிரப்பட்டுள்ள வாழ்க்கைப் பாடங்கள் அல்லாஹ்வின் அருளால் நிச்சயம் துணை புரியும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
தனிப்பட்ட முறையிலும் குடும்ப சகிதமும் வாசிப்பதற்கும் தர்பிய்யா அமர்வுகளிலும் பிற சந்திப்புக்களின்போதும் கலந்துரையாடுவதற்கும் உகந்த அற்புதமான ஆக்கங்களை இது கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.